நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் 'ஸ்ரீ சபரி ஐயப்பன். ராஜா தேசிங்கு இயக்கி உள்ளார். இதில் நாயகனாக விஜயபிரசாத் நடிக்க, நாயகியாக பூஜா நாகர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சோனா, சாம்ஸ், முத்துக்காளை, ராஜேந்திரநாத், வடிவேல் கணேஷ், உடுமலை ரவி, மங்கி ரவி, போண்டா மணி, இந்தியன், ராஜாசாமி, விஷ்வகாந்த், சுமதி, சின்னாளப்பட்டி சுகி, லதா, சுவேதா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் மகாதேவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபு அரவிந்த் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினா, இயக்குநர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது : சில மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் என் மதம் தான் பெரியது என்று சொல்வார்கள், வேறு சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளை பெரிதாக பேசுவார்கள். பல மாநிலங்களில் இந்து கடவுகளை பெருமையாக பேசுவார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் கடவுள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், தமிழகம் புன்னியபூமி. கடவுள்கள் நடமாடிய பூமி, இங்கு ஆன்மிகத்திற்கு எப்போதும் அதிகமான வரவேற்பு உண்டு.
ஸ்ரீ சபரி ஐயப்பன் போன்ற ஆன்மிக படங்கள் அதிகமாக வர வேண்டும். அது கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து என எந்த மதத்தை சேர்ந்த படமாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பக்தி படங்கள் அதிகமாக வரவேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்க்க வேண்டும். திரையரங்குகளுக்கு மக்கள் சென்று படத்தை பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி நடந்தால் இதுபோன்ற பக்தி படங்கள் அதிகமாக வரும், மக்கள் வாழ்க்கையிலும் வளம் பெருகும்.
இவ்வாறு அவர் பேசினார்.