பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
அமெரிக்காவை சேர்ந்த பாடகி சிந்தியா லவ்ர்டே. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் தமிழ் படம் ஒன்றில் பாடுவதற்காக இந்தியா வந்தார். தமிழ் படங்கள் அவருக்கு பிடித்துப்போனதால் தானே ஒரு படத்தை தயாரிக்க விரும்பினார். சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கதைகளை கேட்டவர், சுகுமார் அழகர்சாமி என்பவரின் கதை பிடித்துப்போக அந்த கதையை தயாரித்து அதில் தானே நடிக்கவும் செய்கிறார். சுகுமார் அழகர் சாமி இயக்குகிறார். படத்தின் பெயர் வர்ணாஸ்ரமம்.
ஆணவக்கொலை பற்றிய இந்த படத்தில் ராமகிருஷ்ணன், பிக்பாஸ் புகழ் அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல், விசை உள்பட பலர் நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார், எஸ்.பிரவீணா ஒளிப்பதிவு செய்கிறார்.