ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகர் அஜித் - இயக்குனர் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள படம் ‛துணிவு'. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சென்சாரில் யு/ஏ சான்று பெற்றுள்ள இந்த படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸ் என்றே இதுநாள் வரை விளம்பரப்படுத்தி வந்தனர். பொங்கலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் இன்று(ஜன., 4) ஜன.,11ல் அதாவது பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே துணிவு படத்தை உலகம் முழுக்க வெளியிடுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
பொங்கல் ரிலீஸ் தேதி வந்ததை அடுத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். மற்றொருபுறம் விஜய்யின் வாரிசு பட டிரைலரும் இன்று வெளியானது. அது ஒருபுறம் டிரெண்ட் ஆக இப்போது துணிவு ரிலீஸ் தேதியை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் வாரிசு படம் ஜன., 12ல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.