சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
2023ம் வருடப் பொங்கலுக்கு விஜய் நடிக்கும் 'வாரிசு', அஜித் நடிக்கும் 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவரும் என கடந்த சில மாதங்களாகவே சொல்லி வந்தார்கள். ஆனால், நேற்று வரையிலும் இரண்டு படங்களும் எந்த தேதியில் வெளியாகும் என்று அறிவிக்காமல் இருந்தார்கள். நேற்று 'வாரிசு' டிரைலர் வெளிவந்ததை முன்னிட்டு முதலில் 'துணிவு' படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜனவரி 11 என்று அறிவித்தார்கள். அதற்குப் பிறகு நள்ளிரவில் 'வாரிசு' படமும் ஜனவரி 11ம் தேதியே வெளியாகும் என்று அறிவிப்பு செய்தார்கள்.
முதலில் 'துணிவு' படம் ஜனவரி 11ம் தேதியும், 'வாரிசு' படம் ஜனவரி 12ம் தேதியும் வெளியாகும் என்றுதான் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவித்தார்கள். வெளிநாடுகளிலும் அதனடிப்படையில்தான் முன்பதிவுகளும் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இப்போது 'வாரிசு' படத்தை ஒரு நாள் முன்னதாகவே வெளியிட்டதால் ஜனவரி 12ம் தேதி முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக வெளிநாடுகளில் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
அஜித், விஜய் இருவரது படங்களும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே நாளில் மோத உள்ளன. 2014ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. அப்போது அந்த இரண்டு படங்களுமே சுமாராகத்தான் ஓடின. இப்போது 'துணிவு, வாரிசு' படங்களின் டிரைலர்களைப் பார்த்த பிறகு ரசிகர்களுக்கும் படங்கள் 'சுமாராகத்தான்' இருக்குமோ என்ற எண்ணம் வந்துள்ளது. இரண்டு டிரைலர்களுக்கும் நெகட்டிவ்வான விமர்சனங்களும் எழுந்துள்ளன.