நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு |
விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படம் பொங்கலுக்கு தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு தயாரித்துள்ளார். அதனால், அவர் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நேரடித் தெலுங்குப் படங்களை விட 'வாரிசு' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரிசுடு' படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார்.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே தெலுங்குத் திரையுலகத்தில் கடும் சர்ச்சை எழுந்தது. 'வாரிசுடு' படத்திற்கு அதிக தியேட்டர்களைக் கொடுக்கக் கூடாது என்றனர். அந்த சர்ச்சைகளை மீறி தற்போது 'வாரிசுடு' படம் நேரடித் தெலுங்குப் படங்களான சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' ஆகியவற்றை விட அதிக தியேட்டர்களில் வெளியாகிறது.
உதாரணத்திற்கு முக்கிய மாநகரமான விசாகப்பட்டிணத்தில் 'வாரிசுடு' படம் 8 தியேட்டர்களிலும், 'வால்டர் வீரய்யா', 5 தியேட்டர்களிலும், 'வீரசிம்ஹா ரெட்டி' 4 தியேட்டர்களிலும் வெளியாகிறது. முக்கிய தியேட்டர்கள் அனைத்துமே 'வாரிசுடு' படத்திற்காக எப்போதோ ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது என்கிறார்கள்.