சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

2024ம் ஆண்டின் பிரம்மாண்டமானப் படங்களின் வெளியீடு என்பது நிறையவே இருந்தது. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்கள் பான் இந்தியா படங்களாக வெளிவந்தன. ஆனால், அப்படிப்பட்ட படங்களில் தெலுங்குப் படங்கள் மட்டுமே அதிக வசூலைக் குவித்து டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படம் முதல் நாள் வசூலாக 294 கோடியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் 191 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தையும், ஜுனியர் என்டிஆர் நடித்து வெளிவந்த 'தேவரா' படம் 172 கோடி வசூலையும் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
நான்காவது இடத்தில் 126 கோடி வசூலித்து விஜய் நடித்து தமிழில் வெளிவந்த 'தி கோட்' படமும் உள்ளது.
புஷ்பா 2 - தனிப்பெரும் சாதனை
இவற்றில் 'புஷ்பா 2' படம் 110 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய சினிமாவில் முதன் முதலில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படம் என்ற தனிப்பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்தப் படம் ஒரு தெலுங்கு மொழிப் படம் என்பது தெலுங்கு சினிமாவிற்குப் பெருமையான ஒன்றாக அமைந்துள்ளது.