‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஸ்டாக நடிக்கிறார். இதையடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இதற்கிடையே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஏற்கனவே நடித்து முடித்துள்ள அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படியான நிலையில், தற்போது விஜய் நடிப்பில் வாரிசு படத்தை தயாரித்திருக்கும் தில் ராஜு, அடுத்து தான் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கு சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும், இதை ஹரிஷ் - ஷங்கர் இயக்க போவதாகவும் செய்தி வெளியானது. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல, அந்த செய்தி வெறும் வதந்தி என்கிறார்கள்.