'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமையில் வேற மாறி மற்றும் அம்மா பாடலையும் எழுதி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அஜித் நடிக்கும் 62வது படத்தை இயக்கப் போகிறார் விக்னேஷ் சிவன். அதையடுத்து இந்த படம் அஜித்துக்கான மாஸ் படமாக இருக்குமா? இல்லை விக்னேஷ் சிவனின் வழக்கமான பாணியில் இருக்குமா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், நான் இயக்கிய படங்கள் அனைத்துமே காமெடி ரொமான்ஸ் கலந்த கதையில் தான் உருவாகி இருக்கின்றன.
இதுவரை நான் ஆக்ஷன் கதைகளை இயக்கியது இல்லை. அதோடு, அஜித் 62வது படத்தை இப்படித்தான் இயக்க வேண்டும் என்று சொல்லாமல் எனக்கு பட நிறுவனம் முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக அஜித்துக்காக நீங்கள் தயார் செய்யும் கதையை எப்படி உருவாக்க நினைக்கிறீர்களோ அப்படி சுதந்திரமாக உருவாக்குங்கள் என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். அஜித்துக்கான கதை இந்த மாதிரிதான் இருக்க வேண்டும் என்று எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. அதனால் அஜித்துக்காக முற்றிலும் ஒரு மாறுபட்ட கோணத்தில் ஒரு கதையை உருவாக்கி இருக்கிறேன். கண்டிப்பாக இது அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.