பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சல்மான்கானுடன் இணைந்து ஒன்றாக சுற்றி வந்ததால் பரபரப்பாக பேசப்பட்டவர். அதைத்தொடர்ந்து சமீபகாலமாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். சுகேஷிடம் இருந்து கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள் பரிசுப்பொருட்களை பெற்றுள்ளதாக அவர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பஹ்ரைனுக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஜாக்குலின் பெர்னாண்டஸ், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி அவரிடம் இந்த மனுவை நீங்களே வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் இந்த மனுவின் மீது நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த ஜாக்குலின் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் ஊர் சென்றால் இங்கே திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.