இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இந்தாண்டு துவக்கத்தில் ஹிந்தியில் காஷ்மீர் பைல்ஸ் என்கிற படம் வெளியாகி அரசியல் அரங்கில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரில் பண்டிட்டுகள் பலர் கொல்லப்பட்டது மற்றும் அங்கிருந்து பலர் அகற்றப்பட்டதன் பின்னணியை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி இருந்தது. விவேக் அக்னிகோத்ரி என்பவர் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதேசமயம் இந்த படத்திற்கு எதிரான கருத்துக்களும் அப்போது கிளம்பின. குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு சில கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அதிக அளவில் செல்போன் பேசிக்கொண்டே இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி வாக்கிங் செல்வதும் அவருக்கு பாதுகாப்பாக ஓய் பிரிவு அதிகாரிகள் நான்கு பேர் கூடவே வருவதுமாக ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.