த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
பாலிவுட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். அமிதாப் என்றாலே 6 அடி உயரத்திற்கும் அதிகமான அவரது ஆஜானுபாகுவான தோற்றம் தான் நம் கண் முன் வந்து போகும். சினிமாவில் கூட அவருக்கு அவரது உயரம் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது உண்மை. அதுபற்றி பலரும் சிலாகித்துப் பேசுவதும் உண்டு. ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல உயரம் எனக்கு எப்போதும் பிளஸ் பாயிண்டாகவும் எந்நேரமும் மகிழ்ச்சியையும் தந்தது இல்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் படித்த பள்ளியில் பாக்ஸிங் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் என் உயரம் அதிகம் என்பதால் என்னை சீனியர் மாணவர்கள் இருக்கும் டீமில் இணைத்து விட்டனர். அதனால் பல நாட்கள் என் உயரம் காரணமாக அவர்களிடம் நான் அடியும் திட்டும் வாங்கியது உண்டு” என்று தனது உயரம் தனக்கு சிலநேரங்களில் துயரமாக மாறிய நிகழ்வு குறித்து ஜாலியாக குறிப்பிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.