மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சாக்லெட் ஹீரோ ஸ்ரீகாந்த் "பாகன்" படத்துக்கு பிறகு அடுத்து நடிக்கும் படம் "ஓம் சாந்தி ஓம்". இது இந்தி ரீமேக் இல்லை. தனிக் கதை. ராஜேஷ்.எம்மிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரகாசம் இயக்குகிறார். தெலுங்கில் சமீபத்தில் அறிமுகமாகி வளர்ந்து வரும் நீலம் ஹீரோயினாக நடிக்கிறார். பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் காமெடியாக நடித்தது ஒர்க்அவுட் ஆனதால் இந்தப் படத்தில் தைரியமாக நடிக்கிறார். "எனக்கும் காமெடி வரும் என்பதை பாகன் படத்துலேயே புரூப் பண்ணிட்டேன். இந்தப் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும்படியாக இருக்கும். காமெடி படமாக இருந்தாலும் அதுல சமூகத்துக்கு தேவையான ஒரு மெசேஜையும் சொல்றோம். கும்பகோணத்துல ஷூட்டிங்கை ஆரம்பிச்சிருக்கோம். சம்பர் வெக்கேஷன்ல ரிலீஸ் பண்ண பிளான் பண்ணியிருக்கோம்" என்கிறார் ஸ்ரீகாந்த்.