குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி அவரையும் 'நந்தா' படத்தின் மூலம் திறமையான நடிகராக மாற்றியவர் இயக்குனர் பாலா. 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். நடிப்பதாக அறிவித்து பின்னர் சூர்யா விலகிய மூன்றாவது படம் இது.
இதற்கு முன்பு அவருக்கு கமர்ஷியல் அடையாளத்தை 'காக்க காக்க' படத்தின் மூலம் ஏற்படுத்தித் தந்த கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிப்பதாக அறிவித்து பின் விலகினார். அதற்குப் பிறகு 'சிங்கம்' படத்தின் மூலம் மிகப் பெரும் வசூலை சூர்யாவுக்கு ஏற்படுத்தித் தந்த ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட 'அருவா' படத்திலிருந்தும் விலகினார். இப்போது 'வணங்கான்' படத்திலிருந்தும் விலகியுள்ளார்.
சூர்யா நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்திலும் சூர்யா நடிக்க மற்றொரு படமும் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அது போல பாலா இயக்கத்தில் இனி சூர்யா நடிப்பாரா என்பதை பாலா மட்டுமே முடிவு செய்வார் என்று சொல்கிறார்கள்.