4 கோடி பார்வைகளை கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல்! | இயக்குனர் பீம்சிங்கின் 100வது பிறந்தநாள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி | ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் |
நயன்தாரா நடித்து அவருக்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைந்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் மீண்டும் நயன்தாரா நடிப்பில் உருவாக்கி உள்ள படம் கனெக்ட். இதுவும் மாயா பாணியில் ஹாரர் திகில் படமாக உருவாகி உள்ளது. இதனை நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் அனுபம் கெர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. தமிழில் தயாராகி உள்ள இந்த படம் அதே தேதியில் தெலுங்கிலும் அதே பெயரில் வெளியாகிறது. யுவி கிரியேஷன் இதனை தெலுங்கில் வெளியிடுகிறது. மாயா படமும் தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றது.