வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, படங்களின் மூலம் சாக்லெட் பாய் ஹீரோவாக பிரபலமானவர் ஸ்ரீகாந்த், அதன்பிறகு வர்ணஜாம், போஸ் படங்களின் மூலம் ஆக்ஷன் ஹீரோவும் ஆனார்.
கடந்த 10 ஆண்டுகளாகவே ஸ்ரீகாந்த் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பிரேக் தரும்படியான ஒரு படம் கூட அமையவில்லை. சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். இந்த ஆண்டு வெளிவந்த மஹா மற்றும் காபி வித் காதல் படமும் கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள படம் தீங்கிரை. இந்த படத்தில் அவர் வெற்றியுடன் இணைந்து நடிக்கிறார். நாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கியுள்ளார்.
சைக்கோ கிரைம் திரில்லர் ஜார்னரில் உருவாகி இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஜனவரி மாதம் வெளிவரும் என்று தெரிகிறது. 2023ம் ஆண்டின் வெற்றி கணக்கை இந்த படம் துவக்கி வைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் ஸ்ரீகாந்த்.