அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், டாணாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காலேஜ் ரோடு'. மோனிகா, ஆனந்த்நாகு, அன்சர், அக்சய் கமல், பொம்மு லக்ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆப்ரோ இசை அமைத்திருக்கிறார், கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்றார். ஜெய் அமர்சிங் இயக்கி இருக்கிறார். படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் ஜெய் அமர்சிங் கூறியதாவது: கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிற படமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும் , அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது, அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிற படமாக இருக்கும்.
குறிப்பாக கல்வி கடன் கிடைக்காமலும், கிடைத்த கடனை அடைக்க முடியாமலும் ஏழை மாணவர்கள் படும் கஷ்டங்களை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிற படம். பரபரப்பான திருப்பங்களோடு காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கம்ர்சியலான படமாகவும் இருக்கும். கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து திரைப்படத்தை எடுத்துள்ளோம். என்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங்.