தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்து தனது தொடர் விமர்சனங்களை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் வனிதா விஜயகுமார் தெரிவித்து வருகிறார். பிக்பாஸ் வீடு பற்றியும் அதில் நடக்கும் டாஸ்க் மற்றும் கேம் பற்றியும் அதில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விவரித்து சொல்லும் விமர்சனங்களை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சென்ற வார நிகழ்ச்சி குறித்து பேசியுள்ள வனிதா, அசீமுக்கு ஆதரவாகவும் விக்ரமனுக்கு எதிராகவும் கருத்துகள் கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு அசீம் லைம் லைட்டிற்காக மட்டுமே வந்துள்ளார் என விக்ரமன் தொடர்ச்சியாக கூறி வருகிறார். சென்ற வாரமும் அதே விமர்சனத்தை வைத்தார்.
இதுகுறித்து பேசிய வனிதா, 'அசீம் பேசவும் செய்றான் கேமையும் நகர்த்துறான். ஆனா, நீ பேசிட்டு மட்டும் தான் இருக்க. பிக்பாஸ் வீட்டுக்கு வர்ற எல்லோருமே லைம்லைட்டுக்காக தான் வர்றாங்க. சும்மா அதையே சொல்லிட்டு இருக்க கூடாது. இப்படி பேசுற நீ எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த? நடிகர்களுக்கு லைம்லைட் தேவை. அதுல நியாயம் இருக்கு. அரசியல்வாதி நீ எதுக்கு வந்த. வெளியே இருந்து மக்களுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கே. அசீம் தன்னோட கேம தன்னோட ஸ்ட்ரேடஜி படி விளையாடுறான். உனக்கு அப்படி விளையாட தெரியல' என விக்ரமனை வாட்டி எடுத்துள்ளார்.