ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் | விறுவிறு போஸ்ட் புரொடக்சனில் மம்முட்டி ஜோதிகாவின் காதல் ; தி கோர் |
சின்னத்திரை நடிகர் திவ்யாவும், நடிகர் அர்ணவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திவ்யா 5 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். ஒருவர் மீது ஒருவர் சரமாரியான புகார்களை கூறிவந்தனர். திவ்யா கொடுத்த புகாரில் போலீசார் அர்ணவை கைது செய்தனர். அவர் இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த நிலையில் திவ்யா பல லட்சம் மதிப்புள்ள உயர்ரக புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவர் தன் பெற்றோருடன் கார் ஷோ ரூமிற்கே சென்று கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் காரை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது.