'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'வாரிசு'. 2023 பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' வெளியாகி யு-டியூபில் 75 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்த சிங்கிளான 'தீ' என்ற பாடலை நாளை டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்தப் படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அறிவிப்பிலும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்ப் படமாக உருவாகியுள்ள முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள இந்தப் படத்தின் போஸ்டர்களில் தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு இயக்குனர் என்பதால் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தயங்கலாம் என்றும் பேச்சு உள்ளது.
தமிழகம் முழுவதும் இப்படத்திற்காக வைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பேனர்களில் கூட ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்த, எழுதத் தெரிந்த உதவி இயக்குனர்கள் இந்தப் படத்தில் பணியாற்றவில்லையா ?.