இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் தனது 38 வயதில் காலமானார். மதுரையை சேர்ந்தவர் ஹரி வைரவன். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாடும் குழுவில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து நான் மகான் அல்ல, குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடி குழு 2 ஆகிய படங்களிலும் நடித்தார். அதன்பின் சினிமாவில் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். நடக்க கூட சிரமமாக, முகம் எல்லாம் மாறி மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் இரவு 12.15 மணியளவில் இறந்தார்.
இந்த தகவலை நடிகர் அம்பானி சங்கர் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் "ஹரி வைரவன் " 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஹரி வைரவன் உடல் அவரது சொந்த ஊரான மதுரையை அடுத்த கடச்சனேந்தலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலையில் இறுதிச்சடங்கு நடந்தது. இவருக்கு ஒரு மனைவி, மகள் உள்ளனர். இயக்குனர் சுசீந்திரன், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.