தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நடிகர் வடிவேலு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் நாயகனாக களமிறங்கி உள்ள படம் ‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக தயாராகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வடிவேலு பாடிய அப்பத்தா, பணக்காரன் ஆகிய இரண்டு பாடல்கள் இந்த படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்போது டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதில் விலை உயர்ந்த நாய்களை திருடும் நபராக நாய் சேகராக நடித்துள்ளார் வடிவேலு. அவரது குழுவில் ரெடின் போன்றோரும் இடம் பெற்றுள்ளனர். டிரைலர் ஆரம்பம் முதலே வடிவேலுவின் காமெடி வசனங்களும், அவரது உடல் மொழிகளும் சிரிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. ‛‛தில் இருக்குறவன் மட்டும் நில், பயப்படுறவன், பம்முறவன் எல்லாம் பறந்து ஓடிடு'' என காமெடியான வசனங்களையும் பேசி உள்ளார் வடிவேலு. டிரைலர் வெளியான இரண்டு மணிநேரத்தில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
வருகிற டிச., 9ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வடிவேலுவிற்கு மீண்டும் ஒரு கம் பேக் படமாக அமையுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.




