மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
இந்தியாவை தாண்டி ஹாலிவுட்டிலும் அசத்தியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள இவர் தமிழ், மலையாளம் என பல பிஸியாக படங்களில் இசையமைத்து வருகிறார். நீண்டநாட்களாகவே படம் இயக்கும் எண்ணத்தில் இருந்த ரஹ்மான், ‛99 சாங்ஸ்' என்ற படத்திற்கு கதை, எழுதி, இசையமைத்து இருந்தார். இப்போது லீ மஸ்க் என்ற 36 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை இயக்கி உள்ளார்.
விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார். விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்து ரஜினி படம் பார்க்கும் போட்டோவை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
ரஹ்மானின் மனைவி சாய்ரா கூறிய ஒன் லைனை வைத்து திரைக்கதை அமைத்து படமாக இயக்கி உள்ளார் ரஹ்மான். ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக உள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க இறங்குகிறார். அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி ஜூலியட் அடையாளம் காண்கிறார் என்பது லீ மஸ்க் படத்தின் கதை. இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கி வேடங்களில் நடித்துள்ளனர்.