குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அதையடுத்து சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார் கீர்த்தி.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் தீவிரமாக வரன் பார்த்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் எதிர்பார்க்கிற வரன் கிடைத்ததும் திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகி, தயாரிப்பாளராக தொடர கீர்த்தி சுரேஷ் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதுபற்றி கீர்த்தி சுரேஷ் வட்டாரத்தில் விசாரித்தபோது அது உண்மையில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களில் அவர் நடிப்பதால் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் கீர்த்திக்கு இல்லை என கூறுகிறார்கள்.