டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஒரே நாளில் வெளியான இரண்டு பிராந்திய மொழித் திரைப்படங்கள் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தமிழில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலைக் கடந்தது. அதே நாளில் வெளியான கன்னடப் படமான 'காந்தாரா' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் 'காந்தாரா' படத்தின் வசூல் மிகப் பெரியது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என்கிறார்கள். முதல் பாகத்திற்கான செலவு 100 கோடிக்கும் கூடுதலாக இருக்கலாம். அதே சமயம், 'காந்தாரா' படம் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 170 கோடி, வட இந்தியாவில் 95 கோடி, தெலுங்கில் 60 கோடி, வெளிநாடுகளில் 45 கோடி, கேரளாவில் 20 கோடி, தமிழகத்தில் 12 கோடி என இப்படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு கன்னடப் படமான 'காந்தாரா' 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளிவந்தவை என்பது முக்கியமானது.
100 கோடி பட்ஜெட்டில் தயாரான 'கேஜிஎப் 2' படம் 1200 கோடி வரை வசூலித்தது என்கிறார்கள். இரண்டு படங்களின் லாபத்தையும் சேர்த்தால் 1500 கோடி வரும். இந்திய சினிமாவில் இந்த வருடத்தில் வேறு எந்த மொழிப் படங்களும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. இந்த இரண்டு கன்னடப் படங்களின் வசூல், லாபம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.




