2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவாகியுள்ளது கட்டா குஸ்தி திரைப்படம். செல்லா அய்யாவு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷாலும் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் இணைந்து தயாரித்துள்ளனர். தெலுங்கில் இந்த படம் மட்டி குஸ்தி என்கிற பெயரில் வெளியாகிறது. வரும் டிசம்பர் 2ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, 'வெண்ணிலா கபடி குழு வெளியான சமயத்திலேயே விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன் பிறகு ராட்சசன் படத்தை பார்த்த பின்பு எப்படியேனும் விஷ்ணு விஷால் படத்தை தயாரித்தே தீருவது என முடிவு எடுத்தோம். இப்போது எங்களது தயாரிப்பில் அடுத்ததாக விஷ்ணுவிஷால் நடிக்கிறார் என்பதையும் அந்த படத்தை ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்குகிறார் என்பதையும் இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.