2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாளத்தில் மம்முட்டி தற்போது நடித்துவரும் படம் 'காதல் தி கோர்'. இந்த படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஜோதிகா. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் விசிட் அடித்து இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில், மம்முட்டி தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்து விட்டார். இதைத்தொடர்ந்து இந்தப்படப்பிடிப்பில் அவர் கடைசி நாளாக நடித்த அன்றைய தினம் ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் சுவையான பிரியாணி விருந்தளித்து விடை பெற்றுள்ளார்.