சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர்- நவம்பரில் வெளியாகிறது!! | வேட்டையன் படம் பார்க்கச் சென்ற வீடியோவை வெளியிட்ட துஷாரா விஜயன்! | சர்ச்சை எதிரொலி! ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்! | ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி | ஹனுமான் இயக்குனர் தயாரிப்பில் 'சூப்பர் உமன்' படமாக உருவாகும் மகாகாளி | வேட்டையன் டைட்டில் அதிருப்தி ; ரசிகர்களிடம் ராணா சமாளிப்பு | 6வது வாரத்தில் 'தி கோட்', 4வது வாரத்தில் 'லப்பர் பந்து' | கிராமி விருது தேர்வில் ஆடுஜீவிதம் வெளியேறியது ஏன் ? ஏ.ஆர் ரஹ்மான் விளக்கம் | சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'மோகன்லால் 360' | நடிகர் டி.பி மாதவன் மறைவு ; 30 வருடமாக பிரிந்து இருந்த மகன் நேரில் இறுதி அஞ்சலி |
2022ம் ஆண்டு அதன் கடைசி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எஞ்சியிருக்கும் ஆறு வாரங்களில் எத்தனை படங்கள் வெளிவரும் என்று தெரியாது. 2023ம் ஆண்டு பொங்கலுக்குத்தான் பெரிய படங்கள் வர உள்ளதால் இடைப்பட்ட இந்தக் காலத்தில் பலரும் தங்களது படங்களை வெளியிட வேண்டும் என்று முயற்சிப்பார்கள்.
இந்த வாரம் நவம்பர் 18ம் தேதியும், அடுத்த வாரம் நவம்பர் 25ம் தேதியும் சுமார் 10 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் நவம்பர் 18ம் தேதி, “கலகத் தலைவன், நான் மிருகமாய் மாற, யூகி, காரோட்டியின் காதலி, நோக்க நோக்க,” ஆகிய படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ள 'கலகத் தலைவன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. உதயநிதி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. 'கலகத் தலைவன்' படத்திற்கு முன்பு மகிழ் திருமேனி இயக்கத்தில் 2019ல் வெளிவந்த 'தடம்' படமும் வெற்றிப் படமாக அமைந்தது. முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள உதயநிதி, மகிழ்திருமேனி 'கலகத் தலைவன்' மூலம் தங்களது அடுத்த வெற்றியைப் பெற பெரிய அளவில் எந்தப் போட்டியும் இல்லை.
சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள 'நான் மிருகமாய் மாற' படம் மட்டும் ஓரளவிற்குப் போட்டியை ஏற்படுத்தலாம். அது எப்படியான போட்டி என்பது படம் வெளிவந்தால் மட்டுமே தெரியும். 2016ல் வெளிவந்த 'கிடாரி' படத்திற்குப் பிறகு சசிகுமார் நடித்து 11 படங்கள் வரை வெளிவந்தன. அதில் 9 படங்களில் அவர் தனி கதாநாயகன். அவற்றில் ஒன்று கூட கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெறவில்லை, நல்ல விமர்சனங்களும் கிடைக்கவில்லை. 'பேட்ட, எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களில் கொஞ்ச நேரமே வரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 'நான் மிருகமாய் மாற' படம் ஒரு ஆக்ஷன் படமாக வெளிவர உள்ளது.
இந்தப் படமாவது சசிகுமாரை வெற்றிப் பாதையில் மாற வைக்குமா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அடுத்த வாரமே நவம்பர் 25ம் தேதி சசிகுமார் நடித்துள்ள மற்றொரு படமான 'காரி' வெளிவர உள்ளது. தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து வருவது குறித்து சசிகுமாரே வருத்தப்பட்டுள்ளார். இரண்டு தயாரிப்பாளர்களையும் பேசி கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிடச் சொன்னேன், அது நடக்கவில்லை என்று தன்னுடைய வருத்தத்தையும் நேற்று நடந்த 'நான் மிருகமாய் மாற' பத்திரிகையாளர் சந்திப்பில் வருத்தத்துடன் பேசினார்.
இந்த வார இறுதியில் மீண்டும் மழையின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள். அதையும் எதிர்கொண்டு தலைவைனும், மிருகமாய் மாறுபவரும் தாக்குப் பிடிப்பார்களா ?.