நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியான கன்னடத் திரைப்படம் 'காந்தாரா'. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இந்தியா முழுவதும் அதிக வசூலைக் குவித்துள்ளது.
கன்னடத்தில் படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மூன்று வாரங்களுக்குப் பிறகு மலையாள மொழியிலும் வெளிவந்தது. 350 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் ஹிந்தியில் மட்டுமே சுமார் 75 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. கர்நாடகாவில் 175 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 50 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 25 கோடி வசூலையும் கடந்துள்ளது. தமிழ், மலையாளத்தில் 20 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அனைத்து மொழிகளிலும் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் தென் பகுதிகளில் பேசப்படும் 'துளு' மொழியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் தெற்குப் பகுதி, உடுப்பி ஆகிய இடங்களில் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. 'காந்தாரா' படத்தில் இடம் பெற்றுள்ள 'பஞ்சுருலி தெய்வம்' துளு மொழியில் பேசுவதாகத்தான் படத்திலும் குறிப்பிட்டிருந்தனர். உடுப்பி சார்ந்த மலைப் பிரதேசத்தில்தான் படத்தின் கதைக்களமும் அமைக்கப்பட்டிருந்தது. அம்மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதைதான் 'காந்தாரா'.