ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

சமந்தா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோசியல் திரில்லராக வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமந்தா ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அதற்கேற்ற பாராட்டுக்கள் அவருக்கு தற்போது குவிந்து வருகின்றது.
இந்த நிலையில் யசோதா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது இடுப்பை சுற்றி மேக்கப் சாதனங்கள் அடங்கிய பை ஒன்றை கட்டிக்கொண்டு அங்கிருந்த பெண் ஒருவருக்கு மேக்கப் போடுவது போன்று சமந்தா ஜாலியாக குறும்புத்தனம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை யசோதா படத்தில் சமந்தாவின் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய பாலிவுட்டை சேர்ந்த ரோகித் பட்கர் என்பவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பில் சமந்தாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் பணியாற்ற எனக்கு அழைப்பு வந்தபோது கொஞ்சம் டென்ஷன் ஆக இருந்தது. சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவது ஒருவேளை எந்த கலாட்டாக்களும் இல்லாமல் சீரியஸாக இருக்குமா ? இல்லை நேரத்துக்கு வந்தோம் போனோம் என வேலை பார்க்கும் விதமாக இருக்குமா ? என்னுடைய வேலைபார்க்கும் பாணியில் நான் சமரசம் செய்துகொள்ள வேண்டி வருமா ? என பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
எல்லாம் அந்த அற்புத பெண்ணை சந்திக்கும் வரை தான்.. அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் அவருடன் எனக்கு நிகழ்ந்தது எல்லாமே மறக்க முடியாத ஜாலியான அனுபவங்கள் தான். தன்னுடன் பணிபுரியும் ஒவ்வொருவரையும் அவர் அவ்வளவு அழகாக கவனித்துக்கொண்டு எப்போதும் கலகலப்பாகவே வைத்திருந்தார். அவருக்குள் இருந்த ஒரு நிஜமான ஹீரோவை, ஒரு நிஜ சூப்பர்ஸ்டாரை, ஒரு நிஜ மனிதனை, ஒரு நிஜ நண்பனை நான் ஒவ்வொரு நாளும் உணர்ந்தேன்” என்று நிகழ்ந்து பாராட்டியுள்ளார்.




