புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கிய இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருந்தார் . இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
'புஸ்பா- தி ரூல்' என தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் நடக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
உலகமே ஆவலோடு எதிர்பார்த்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம், டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் 'புஷ்பா2' படத்தின் முன்னோட்ட வீடியோவை அவதார் படம் வெளியாகும் பல திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.