இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி |

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். அதைத்தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த ஆண்டவன் கட்டளை படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரித்திகா சிங், தற்போது துல்கர் சல்மான் நடித்துவரும் கிங் ஆப் கோதா என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் அவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே நடனமாடுகிறார். கடந்த சில நாட்களாக இந்தப் பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக இந்த சிறப்பு பாடலுக்கு சமந்தாவை ஆட வைக்கத்தான் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபநாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திட்டத்தை மாற்றி அவருக்கு பதிலாக ரித்திகா சிங்கை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர்.