தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
ஹரி - ஹரிஷ் இயக்கத்தில், மணி சர்மா இசையமைப்பில், சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'யசோதா'. முதன்மைக் கதாநாயகியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி பான் இந்தியா படமாக வெளிவந்தது.
முன்னணி தெலுங்கு கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் படங்களே வசூலில் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான மூன்று நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்து பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேவி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்திற்காக பெரிய அளவில் எந்த புரமோஷனையும் செய்யவில்லை. தனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சமந்தாவால் எந்த பொது நிகழ்வுகளிலும் பங்கு பெற முடியவில்லை. அதனால், அவரது பேட்டியை தமிழ், தெலுங்கில் பதிவு செய்து தயாரிப்பு நிறுவனம் யூ டியூபில் வெளியிட்டது. அந்த ஒரு வீடியோவைப் பார்த்தே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு அதிக அளவில் வந்துள்ளதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.