ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் உதயா ஆகியோரின் சகோதரி மகன் ஹமரேஷ். மாநகரம், தெய்வதிருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் ரங்கோலி படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை கோபுரம் ஸ்டூடியோ சார்பில் கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். வாலி மோகன்தாஸ் இயக்குகிறார்.
பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வாலி மோகன்தாஸ் கூறியதாவது: தற்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம். சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன என்றார்.