அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று |
'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு 'லவ் டுடே' படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
2கே கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 4ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் 7 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது 30 கோடி வசூலை எட்டி உள்ளது.
இந்நிலையில் லவ் டுடே படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த போட்டோவை பகிர்ந்து பிரதீப் கூறுகையில், ‛‛நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு , அந்த கண்கள் , சிரிப்பு , நடை மற்றும் காதல். என்ன ஒரு ஆளுமை. லவ் டுடே பார்த்து வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீங்க சொன்ன வார்த்தைகளை மறக்க மாட்டேன் சார்'' என மகிழ்ச்சியுடன் பதிவுட்டுள்ளார்.