என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
அஜித் நடித்த ‛வீரம்' படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கன். தொடர்ந்து சார்பட்டா பரம்பரை, கேஜிஎப் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான் கொக்கன் கடந்த 2019ல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர் சமூகவலைதளங்களில் நெருக்கமான புகைப்படங்களையும், பல்வேறு விதமான உடற்பயிற்சி செய்யும் போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதியருக்கு அடுத்தாண்டு குழந்தை பிறக்க உள்ளது. இதுபற்றிய தகவல்களை இருவருமே தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ‛‛குட்டி அதிசயம் வரவிருக்கிறது'' என தெரிவித்து பூஜா கர்ப்பமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜான் கொக்கன்.