சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

தமிழ் சினிமாவும், மற்ற தென்னிந்திய மொழி சினிமாவும் அவ்வப்போது கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களை வெளியிட்டு வருகின்றது. பெண்களை மையப்படுத்திய அந்தப் படங்கள் சிறந்த படங்களாக அமைந்துவிட்டால் அதற்கான வரவேற்பும் கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு இருக்கிறது.
இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'யசோதா' படம் தமிழ், தெலுங்கிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படமும் வெளியாகிறது. இரண்டு படங்களிலும் கதாநாயகிகளின் போராட்டம்தான் படத்தின் மையக்கருவாக இருக்கிறது.
'யசோதா' படத்தில் சமந்தா, வாடகைத் தாய் கதாபாத்திரத்தில் நடித்துளளதாகத் தெரிகிறது. 'டிரைவர் ஜமுனா' கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பெண் டாக்சி டிரைவராக நடித்திருக்கிறார். இவர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள்தான் இந்தப் படங்களின் கதை. பெண்களை முன்னிலைப்படுத்தும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவருவது ஆச்சரியம்தான்.
அந்தப் படங்களோடு நவம்பர் 11ம் தேதியன்று 'மிரள், பரோல், திருமாயி' ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.