இப்ப நான் என்ன பண்றது? வடிவேலு பாணியில் புலம்பிய மோகன்லால் பட இயக்குனர் | வெள்ளிக்கிழமை மார்ச் 21ல் வெளியான படங்களின் ரிசல்ட் என்ன? | கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" |
சமந்தா நடிப்பில் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் யசோதா. உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் சமீப நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த வாடகைத்தாய் விவகாரத்தை மையப்படுத்தி உருவாகி இருந்தது.
ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் வாடகைத்தாய் விஷயத்தில் நடக்கும் மோசடிகளை நாயகி சமந்தா அம்பலப்படுத்துவது போல இதன் கதை அமைந்திருந்தது. இந்த நிலையில் இந்த படம் தங்களது மருத்துவமனையின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது எனக்கூறி ஆந்திராவில் ஒரு பிரபல மருத்துவமனை ஐதராபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. படத்திலும் தங்களது நிஜ மருத்துவமனையின் பெயரையே பயன்படுத்தி உள்ளதால் மருத்துவமனை குறித்து பொதுவெளியில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் விதமாக இது உள்ளது எனக்கூறி இந்த படத்தின் ஒடிடி வெளியிட தடை செய்ய வேண்டும் என அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் ஓடிடி ரிலீஸ் தேதியை நிறுத்தி வைக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தே படத்தை எப்போது ஓடிடியில் ரிலீஸ் செய்வது என்பது குறித்து தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் 19க்கு முன்பாக இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிய வந்துள்ளது. அதேசமயம் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் மிகவும் தாமதமாக அந்த மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.