மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களை தொடர்ந்து கன்னடத்திலிருந்து இன்னும் ஒரு வெற்றிப்படமாக வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் காந்தாரா. கர்நாடகாவில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என நான்கு மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, வெளியிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்த சமயத்தில் படம் வெளியான சில வாரங்களிலேயே இந்த படத்தில் இடம்பெற்ற வராஹ ரூபம் என்கிற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக்குழுவாக இயங்கி வரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் ஏற்கனவே உருவாக்கிய நவரசம் என்கிற பாடலின் காப்பி என்கிற சர்ச்சை எழுந்தது.
இதை காந்தாரா பட இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் மறுத்தாலும் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு, கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. அதனையடுத்து காந்தாரா படத்தில் வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து படத்திலிருந்து அந்த பாடல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இணைக்கப்பட்டது. தற்போது ஒடிடி தளத்தில் வெளியானாலும் கூட வராஹ ரூபம் பாடல் நீக்கப்பட்டு புதிய பாடலை இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இந்த புதிய பாடல் குறித்த தங்களது அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய திருப்பமாக வராஹ ரூபம் பாடலுக்கும் நவரசம் பாடலுக்கும் சம்பந்தம் இல்லை. மீண்டும் வராஹ ரூபம் பாடலையே காந்தாரா படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கேரள நீதிமன்றம் தடையை நீக்கியுள்ளதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்கிறார்கள். இது பொய்யான செய்தி என கூறுகிறார்கள்.