டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்கிற திரைப்படம் வெளியானது. இதற்குமுன் கோமாளி என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்த பிரதீப் ரங்கநாதன், இந்த படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களமிறங்கினார். அதற்கு கைமேல் பலனாக, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக இன்றைய காதலர்கள் பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து, இளைஞர்களை மட்டுமல்ல குடும்பங்களையும் கூட இந்தப்படத்தைப் ரசித்துப் பார்க்கும் விதமாக கொடுத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இந்த படத்திற்கு இங்கே கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு நேற்று வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல்காட்சியை ஆந்திராவில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் அங்கே நின்ற மீடியாக்களிடம் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பையும் டைரக்சனையும், காதலர்கள் தங்களுடைய செல்போன்களை ஒருநாள் மற்றும் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளும் புதிய கான்செப்ட்டையும் உரத்த குரலில் சிலாகித்து பாராட்டி கொண்டிருந்தார்.
அப்போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிரதீப் ரங்கநாதனை பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அலேக்காக தூக்கினார் அந்த ரசிகர். ஆந்திராவில் நமக்கு இப்படி ஒரு வரவேற்பா என பிரதீப் ரங்கநாதன் ஆச்சரியப்பட்டு போனார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.