'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஹிந்தி, தமிழ், தெலுங்கிலும், மூன்று வாரங்களுக்குப் பிறகு மலையாளத்திலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். சுமார் 400 கோடி வசூலை இந்தப் படம் பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்ற 'வராஹ ரூபம்' என்ற பாடல் தங்களது 'நவரசம்' பாடலின் 'திருட்டு வடிவம்' என அப்பாடலை உருவாக்கிய தைக்குடம் பிரிட்ஜ் என்ற மலையாள இசைக்குழு சில வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்பின் அந்தப் பாடலுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் யு டியுபில் அப் பாடல் நீக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 'காந்தாரா' படம் ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி தளத்தில் அப்பாடலை அமேசான் நிறுவனம் நீக்கியுள்ளது.
இது குறித்து தைக்குடம் பிரிட்ஜ் இன்ஸ்டாகிராம் தளத்தில், “அமேசான் பிரைம் நிறுவனம் 'காந்தாரா' படத்தில் இடம் பெற்ற 'நவரசம்' பாடலின் திருட்டு வடிவத்தை நீக்கியுள்ளது. நீதி நிலைத்தது. உரிமைக்காகப் போராடிய எங்களுக்கு ஆதரவளித்த, இசையுலகத்தினர், ரசிகர்கள், மீடியா ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
'வராஹ ரூபம்' பாடலை சமீபத்தில்தான் பட நிறுவனம் யு டியூபிலிருந்து நீக்கியது. தற்போது ஓடிடி தளத்தில் அதற்குப் பதிலாக வேறு ஒரு பாடலை இணைத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பாடல் ஈர்ப்பாக இல்லை, மீண்டும் பழைய 'வராஹ ரூபம்' பாடலையே கொண்டு வாருங்கள் என படக்குழுவினருக்கு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.