சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

அனுதீப் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க கடந்த மாதம் 21ம் தேதி வெளியான படம் 'ப்ரின்ஸ். இப்படத்தை அப்போது தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தார்கள்.
வெளியீட்டிற்கு முன்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்ததும் ரசிகர்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம். சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களிலேயே மோசமான ஒரு தோல்வியைப் பெற்ற படம் என்ற பெருமை மட்டுமே இப்படத்திற்குக் கிடைத்தது. வெளியான ஒரு சில நாட்களிலேயே பல ஊர்களில் படத்தைத் தூக்கிவிட்டனர்.
ஒரு மாதம் கழித்து இப்படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் ஏற்கெனவே தமிழ், தெலுங்கில் வெளியான படத்தை ஓடிடி தளத்தில் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் சௌத் இந்தியா படமாக வெளியிட்டுள்ளார்கள். தியேட்டர்களில் இந்தப் படத்தை பலரும் பார்க்காததால் ஓடிடியில் ஓரளவிற்குப் பார்க்க வாய்ப்புள்ளது. படத்தைப் பார்க்க ஆரம்பித்த பின் அவர்களுக்கு அந்தப் பொறுமை இருக்குமா என்பதை பார்த்தவர்களிடம் தான் கேட்க வேண்டும்.