சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் | என் ஓட்டுக்கு விஜய்க்கு தான் - ஆல்யா மானசா பேட்டி | காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது |
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். திவ்யா ஸ்பந்தனா அலைஸ் ரம்யா நாயகியாக நடித்திருந்தார். சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். 5 ஸ்டார் கதிரேசன் தயாரித்தார். வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, இயக்குனர் வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் குமார், டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை திவ்யா ஸ்பந்தனா இந்த புகைப்படங்களை வெளியிட்டு, ‛‛15 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மேலும் ‛பொல்லாதவன் 2' படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.