தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில் தற்போது அப்படத்தின் பிரமோஷன் வேலைகளை பரபரப்பாக தொடங்கி விட்டார்கள். நேற்று விஜய் பின்னணி பாடி நடித்துள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் கேரளா உரிமை குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இப்படம் கேரளாவில் 6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாகவும், இதுவரை விஜய் நடித்த படங்களில் இப்படமே கேரளாவில் அதிக தொகைக்கு விற்பனை ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு கேரளாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளார்கள் .