திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'வாத்தி'. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தின் முதல் பாடலை தனுஷே எழுதியுள்ளார். மேலும் காதல் பாடலை ஸ்வேதா மோகன் பாடி உள்ளார் .
இந்த தகவலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஸ்வேதா மோகன் பகிர்ந்துள்ளார் . அந்த பதிவில் இன்னும் கொஞ்சம் நேரம், என்ன சொல்ல, நீ பார்த்த விழிகள், முன்னாடி போற புள்ள, ஜோடி நிலவே, சிறுக்கி வாசம், வெண்பனி மலரே, பார்த்தேன் போன்ற பாடல்களை போலவே நான் பாடியுள்ள இந்த பாடலும் தனுஷின் அடுத்த ஹிட் பாடலாக இருக்கும் என கூறியுள்ளார் .