தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இவானா. இதில் அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். படம் பெரிய வரவேற்பை பெறாததால் அவரும் வெளியில் தெரியாமல் போனார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவர் அறியப்படவில்லை.
இந்த நிலையில்தான் அவர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கிறது லவ் டுடே படம். கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில் பிரதீப் ஜோடியாக இவானா நடித்துள்ளார். காதலனும், காதலியும் தங்கள் செல்போனை மாற்றிக் கொள்வதால் வரும் பிரச்சினைகைள சொல்லும் படம். இதில் இவானாவின் நடிப்பு பேசப்படுபவதாக அமைந்துள்ளது. படமும் இளைஞர்களிடைவே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவானாவுக்கு 10 வருடங்களுக்கு பிறகுதான் ஒரு அடையாளமும், அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இதனால் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் கையில் இப்போது படங்கள் எதுவும் இல்லை. இனி வாய்ப்புகள் அதிகம் வரலாம்.