'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் படம் 'மாணிக்'. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது.
ஹிந்தியில் வெளியான 'லுடோக், 'ஜக்கா ஜாசூஸ்க் மற்றும் 'சத்ரசல்க் ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் 2017ம் ஆண்டு டாடி என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த படத்தில் நடிக்கிறார்.