இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து திரும்ப அழைத்து வரும் போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது.

விபத்தில் சிக்கிய காரின் புகைப்படங்களைப் பகிர்ந்து ரம்பா டுவிட்டரில், “குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் வழியில் ஒரு சந்திப்பில் எங்கள் கார் மீது மற்றொரு கார் மோதியது. நான், எனது குழந்தைகள், செவிலித் தாய் ஆகியோருக்கு லேசான காயம். ஆனாலும், பாதுகாப்பாக இருக்கிறோம். எனது குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறாள். மோசமான நாட்கள், மோசமான நேரம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், உங்கள் பிரார்த்தனைகளுக்கு நிறைய அர்த்தம் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.