மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மாஸ்டர்'.
இப்படம் ஜப்பான் நாட்டில் அடுத்த மாதம் நவம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. “இந்திய சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார், கடைசியாக இங்கு வந்துவிட்டார்” எனக் குறிப்பிட்டு படத்தைப் பற்றி விளம்பரப்படுத்தி உள்ளார்கள். அதற்கான முன்பதிவுகளையும் ஆரம்பித்துள்ளார்கள்.
'மாஸ்டர் டீச்சர் இஸ் கம்மிங்' என படத்திற்கு ஜப்பானில் தலைப்பு வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்திற்குப் பிறகு விஜய் தான் தமிழ் சினிமாவில் ஸ்டார் ஆக இருக்கிறார், இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸில் கடந்த வருடம் மூன்றாம் இருடத்தில் இருந்தவர் என்றும் அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த 'கைதி' படம் ஜப்பான் நாட்டில் 'பிரிசனர் டில்லி' என்ற பெயரில் திரையிடப்பட்டுள்ளது.