சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
சமீப வருடங்களாக கன்னட சினிமா தமிழ் மற்றும் தெலுங்கு, ஏன் மலையாள படங்களுக்கு கூட சவால் விடும் வகையில் மிக அருமையான கதைகளுடனும் கமர்ஷியலாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. கேஜிஎப்-2 மூலமாக ஹிந்தி சினிமாவில் கூட தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அந்த வகையில் கன்னட இளம் நடிகர்கள் சிலர் பான் இந்தியா நடிகர்களாக மாறி வருகின்றனர். இந்தநிலையில் கன்னட சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமாரும் கன்னட எல்லையை தாண்டி பான் இந்தியா நடிகராக மாற விரும்புகிறார். அந்த வகையில் தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடனும் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்தநிலையில் கன்னடத்தில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளியாகும் விதமாக உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார். இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழில் தற்போது விக்ரம் பிரபு, வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள ‛பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ள படத்தயாரிப்பு நிறுவனம் சிவராஜ்குமார், கார்த்திக் அத்வைத் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளது.