பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தரா என்கிற திரைப்படம் வெளியானது. நம் கிராமங்களில் குல தெய்வமாக கும்பிட்டு வரும் தெய்வங்களை, அவை எப்படி மண்ணையும் மக்களையும் ஆபத்திலிருந்து காக்கின்றன என்பது பற்றி உணர்வுபூர்வமாக இந்த படம் சொல்லி இருந்தது. இந்த படம் ஏற்படுத்திய அதிர்வலைகளை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் கூட மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல படம் பார்த்த பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு தங்களது பாராட்டுக்களையும் இந்த படம் குறித்த ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த படம் குறித்து இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு என தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்து ரசித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, இந்தப்படம் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்பையும் சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ளும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “உங்களுக்கு (ரிஷப் ஷெட்டி) என்ன தெரிந்ததோ அதை எழுதுங்கள்.. உங்களுடைய இதயத்துக்கு நெருக்கமாக உள்ள கதைகளை உங்கள் இதயத்தில் இருந்து சொல்லுங்கள். கடைசி 20 நிமிடம் இந்த திரைப்படம் என்னை சில்லிட வைத்து விட்டது. அந்த நேரத்தில் நான் திக்பிரமை பிடித்தவனாக ஆகிவிட்டேன். கோலா, பூதங்கள், தெய்வங்கள் என எனது சிறு வயது நினைவுகளுக்கே நான் சென்றுவிட்டேன்.. அவற்றை ஒரு திரைப்படமாக மிகவும் மரியாதையாகவும் அழகாகவும் காட்டியுள்ளீர்கள். உங்களிடம் அதிக சக்தி இருக்கிறது.. தொடர்ந்து மேலே செல்லுங்கள்” என்று கூறியுள்ளார்